கடனில் சிக்கியுள்ள ஏர் இந்தியாவுக்கு ரூ.1500 கோடி:
மத்திய அரசு முடிவு 76 சதவீத பங்கை வைத்திருந்தும் இந்த நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒருசில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் யாரும் இந்நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை
இந்த நிலையில் விற்பனை திட்டத்தை கைவிட்டு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் நடவடிக்கையாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
நிர்வாக திறமையின்மையால் அடைந்த நஷ்டத்திற்கு ரூ.1500 கோடி ஒதுகியது தவறு என்றும், இந்த பணம் மக்களின் திட்டங்களுக்கு செல்ல வேண்டிய பணம் என்றும் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.