கடனை திரும்ப செலுத்தாதவர்கள் பங்குச் சந்தையில் ஈடுபட தடை: செபி நடவடிக்கை
வேண்டுமென்றே கடனை செலுத்த தவறிய கடனாளிகள் மற்றும் நிறுவ னங்கள் பங்குச் சந்தையில் செயல் பட செபி தடை விதித்துள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இயக்குநர் குழு செயல்பாடுகளை முடக்கவும் செபி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகள்படி, கடன் செலுத்தாத நிறுவனங்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் நிதி திரட்டும் நடவடிக்கைகளை தடை செய்வது மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் வழியேற்பட்டுள்ளது.
கடன் செலுத்த தவறியவர் களின் நிதி திரட்டும் நடவடிக் கைகளை கட்டுப்படுத்துவதில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்கிற நிலையில், செபி இந்த முயற் சியை எடுத்துள்ளது. பங்குச் சந்தை இடைத்தரகர்கள் குறிப்பாக மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு தரகு நிறுவனங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய விதி முறைகளை நேற்று முன்தினம் முதல் நடைமுறைப்படுத்தி யுள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறை கள்படி வேண்டுமென்றே கடன் செலுத்த தவறிய தனிநபர்கள், நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
இதன்படி இவர்கள் பொதுப் பங்கு வெளியீடு செய்ய முடியாது. மேலும் கடன் பத்திரங்கள் அல்லது மாற்றிக் கொள்ள இயலாத, மீட்கக்கூடிய முன்னுரிமைப் பங்கு களை நிறுவனங்களோ அல்லது நிறுவனர்களோ அல்லது கடனாளி களால் நியமிக்கப்படும் இயக்குநர் களோ வெளியிட்டு நிதி திரட்ட முடியாது என்று மே 25 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் செபி கூறியுள்ளது.
இன்னொரு பக்கம் பட்டிய லிடப்பட்ட நிறுவனமாக இருந்தால் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் பொறுப்புக்கு அனுமதிப்பதையும் செபி தடை செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களில் நிறுவனர் கள், இயக்குநர்கள் அல்லது இவர்களால் நியமிக்கப்படும் நிர்வாக அலுவலர்கள் புதிய முயற்சிகளுக்கு பதிவு செய்வதும் அனுமதி அளிக்கப்படாது என்று புதிய விதிமுறைகளில் செபி அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் கிங்பிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி வங்கிகளுக்கு திருப்பி செலுத்த தவறிய நடவடிக்கைகளுக்கு பிறகு செபி மேற்கொள்கிறது என்பது முக்கியமானது.