கடன்கள் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?

கடன்கள் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?

நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.

நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து மல்லிகைப்பூ எண்ணெயில் (‘ஜாஸ்மின்’ எண்ணெய்) விளக்கேற்றி, ‘நரசிம்ம பிரபத்தி’ 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.

மேலும் இந்த பரிகாரத்தை செய்ய காலை 6.15 – 7 மணி மிக சிறந்தது. முடியாதோர், மாலை 8.15 – 9 மணிக்குள் செய்யலாம். ஜாஸ்மின் (மல்லி) எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம். பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.

Leave a Reply