கடன் சுமையால் கஜானா காலி: இம்ரான்கான்
பாகிஸ்தானில் முந்தைய ஆட்சி வைத்து சென்ற கடன் சுமை காரணமாக அரசு நிர்வாகத்தை நடத்த முடியாத அளவுக்கு கஜானா காலியாக இருப்பதாக சமீபத்தில் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களால் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், இதனால் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இருந்து விடுபட அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும், நம்மால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய் சென்று கொண்டிருப்பதாகவும் இம்ரான்கான் சுட்டிக்காட்டினார்.