கடன் வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு

கடன் வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும் இருந்து வ்ந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது.

இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.4 ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் பணவீக்க விகிதம் 3.2 முதல் 3.4 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply