கடல் மட்டம் 8 அடி உயரும் என விஞ்ஞானிகள் தகவல்! சென்னை மூழ்குமா?

கடல் மட்டம் 8 அடி உயரும் என விஞ்ஞானிகள் தகவல்! சென்னை மூழ்குமா?

வரும் 2100ஆம் ஆண்டிற்குள் கடல்மட்டம் சுமார் 8 அடி உயரும் என்றும் அப்போது கடலோர நகரங்களான சென்னை உள்பட உலகின் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு கட்டுப்படுத்தவில்லை என்றால் 2100ஆம் ஆண்டில் 8 அடியும், 2300ஆம் ஆண்டில் 50 அடியும் கடல்மட்டம் உயரும் என்றும், இதனால் உலகின் பல கடலோர நகரங்களும் அதனை சுற்றிய பகுதிகளும் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் வருடாந்த விமர்சனம் நிகழ்ச்சியில் சமர்பித்தனர்.

உலக மக்கள் தொகையில் 11% மக்கள், கடல் மட்டத்தின் 33 அடிக்கு மேல் தான் வாழ்கிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறியதைபோல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த உடனடியாக உலகின் அனைத்து அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உண்மை

Leave a Reply