கடும் நடவடிக்கை பாயும்:

சச்சின் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என சச்சின் பைலட் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எம்எல்ஏக்கள் ஆதரவு எனக்கு மட்டும்தான் இருக்கிறது என கூறியுள்ள சச்சின் பைலட், ஜெய்பூர் திரும்பி செல்லும் எண்ணம் இப்போது இல்லை என்றும், முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கு பெரிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சச்சின் பைலட் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் ராஜஸ்தான் காங். பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

Leave a Reply