கடைசி ஓவரில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்: மீண்டும் சூப்பர் ஓவர்

கடைசி ஓவரில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்: மீண்டும் சூப்பர் ஓவர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 4வது டி20 போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் போடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 165 ரன்கள் எடுத்த நிலையில் 166 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது. இந்த நிலையில் 19ஆவது ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.

வெற்றிபெற 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 20 ஓவரை ஷர்துல் தாக்கூர் வீச வந்தார். இந்த ஓவரில் முதல், மூன்றாவது, ஐந்தாவது மற்றும் கடைசி பந்துகளில் விக்கெட் விழுந்தது. எனவே 20வது ஓவரில் அந்த அணி வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் போட்டி டையில் முடிந்தது இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply