கட்சியை கலைக்கின்றாரா கமல்ஹாசன்? சினிமாவில் கவனம் செலுத்த முடிவு!

கட்சியை கலைக்கின்றாரா கமல்ஹாசன்? சினிமாவில் கவனம் செலுத்த முடிவு!

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் கட்சி 5 முதல் 10 சதவீதம் ஓட்டுக்களை பெறும் என்றாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வந்தன.

இந்த நிலையில் கடந்த தேர்தலுக்கே செலவுக்கு திண்டாடிய கமல் கட்சி, உடனடியாக ஆட்சி கவிழ்ந்து சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தால் தாக்குப்பிடிக்காது என்றே கருதப்படுகிறது. எனவே கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பிக்பாஸ், சினிமாவில் கவனம் செலுத்த கமல் முடிவு செய்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

ஆனால் கமல் மன உறுதி கொண்டவர் என்றும் கட்சியை தொடர்ந்து நடத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்காமல் விட மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply