கணவருக்கு தெரியாமல் தாலியை விற்று கழிவறை கட்டிய பீகார் பெண்
பாரத பிரதமர் நரேந்திரமோடி, கழிவறை இல்லாத வீடே இந்தியாவில் இருக்க கூடாது என்ற கொள்கையுடன் இருக்கும் நிலையில் பீகார் மாநிலத்தில் ஒரு பெண் தனது கழுத்தில் இருந்த தாலியை விற்று கழிப்பறை கட்டியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் பீகார் மாநில பாட்னா அருகில் உள்ள வருணா கிராமத்தில் வசிக்கும் தலித் பெண் ருங்கி தேவி என்பவர் தனது கணவர் பரசுராம் பஸ்வானிடம் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் செல்ல வேண்டி உள்ளதாகவும், எனவே கழிவறை கட்டி கொடுங்கள் என்று கேட்டார். அவர் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லாததால் கழிவறை கட்டாமல் நாட்களை கடத்தி வந்தார்.
இந்த நிலையில் பணம் இல்லாமல் கணவர் தயங்கியதால் ருங்கி தேவி தாலியை விற்று கழிவறை கட்ட முடிவு செய்தார். கணவருக்கு தெரியாமல் தாலியை எடுத்துக்கொண்டு நகை வியாபாரியிடம் கொடுத்து அதை ரூ.9000-க்கு விற்றாள். அந்தப் பணம் போதுமானதாக இல்லாததால் கம்மலையும் ரூ.4,000-க்கு விற்று வீட்டில் கழிப்பறை கட்டினார். கணவர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாதானம் அடைந்து மனைவிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.