கனடா செல்லவிருந்தவரை காலன் கொண்டு போய்விட்டானே! இளம்பெண் மரணத்திற்கு யார் பொறுப்பு?
நேற்று சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர் விழுந்ததால் பரிதாபமாக பலியானார் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றன
மேற்படிப்பை முடித்துவிட்டு கனடா செல்வதற்காக கனவுகளுடன் தேர்வெழுதி காத்திருந்த சுபஸ்ரீயை தற்போது காலன் கொண்டு சென்று விட்டான். அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகளான சுபஸ்ரீயின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்? பேனர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையை மதிக்காத அரசியல் கட்சிகளா? அரசியல் கட்சிகளும் உத்தரவை மதிக்காமல் இருப்பது தெரிந்தும் அக்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத நீதிமன்றமா? பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தத காவல்துறையா? அல்லது இது போன்ற சமூக அநீதிகளை தட்டி கேட்காமல் மந்தமாக இருக்கும் மக்களா? இவர்களில் யார் காரணம்? இந்த மரணத்திற்கு பொறுப்பேற்பது யார்?
இனியாவது ஒரு உயிர் கூட பேனர் கலாச்சாரத்தால் இழக்காமல் இருப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஒரு பேனர் வைப்பதால் ஒரு அரசியல் கட்சிக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? விளம்பரம் செய்ய இன்டர்நெட், தொலைக்காட்சி உள்பட பல வழிகள் இந்த டெக்னாலஜி உலகில் இருக்கும்போது சாலையில் போக்குவரத்தை இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பது சரியா?