கனமழையிலும் நிரம்பாத ஏரிகள்
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சென்ற நிலை ஏற்பட்டாலும், இந்த கனமழையிலும் ஒருசில ஏரிகள் நிரம்பவில்லை. சில ஏரிகளில் கால்பகுதி கொள்ளளவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் எந்தெந்த ஏரிகள் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது குறித்த புள்ளிவிவர பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,
*3231 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 656 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
*881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டசோழவரம் ஏரியின் இருப்பு 464 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
*3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு1152 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
*3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 1211 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11057 மில்லியன் கனஅடி. ஆனால், நிரம்பியுள்ள அளவு 3483 மில்லியன் கனஅடியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.