கனமழை எதிரொலி: நாகையில் தீயணைப்பு நிலைய கட்டடம் இடிந்தது

கனமழை எதிரொலி: நாகையில் தீயணைப்பு நிலைய கட்டடம் இடிந்தது

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளன. எனவே பழைய கட்டடங்களில் உள்ள அலுவலகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாகையில் தீயணைப்பு நிலைய கட்டடம் மழையால் முழுமையாக இடிந்து விழுந்தது; ஆனால் கட்டடத்தின் நிலை அறிந்து ஏற்கனவே தீயணைப்பு நிலையம் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இடிந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி மழைவிட்டவுடன் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply