கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு

நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது

தொடர்ந்து தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply