உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பேரணி ஒன்றை நடத்தினார்
இதனையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையை நோக்கி போலீசாரின் தடையை மீறி அவர் பேரணியில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
அதன்பின் அவர் சில மணி நேரங்களில் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார். கனிமொழியின் கைது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
கழக மகளிரணி செயலாளர் திருமதி கனிமொழி தலைமையில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து நடந்த ஒளி ஏந்திய பேரணியைத் தடுத்து- கழகத்தினரைக் கைது செய்ததைக் கண்டிக்கிறேன். அடிமைகள் தம் விசுவாசத்தைக் காட்ட உ.பி. காவல்துறையைப் போல் தமிழகக் காவல்துறையை நடக்கச் செய்தது கேவலம்.