கனிமொழி போராட்டத்திற்கு மதிமுக, விசிக ஆதரவு
பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை சீரழித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தடையை மீறி தி.மு.க பேரணி நடத்தியது. கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுகவினர் மட்டுமின்றி ம.தி.மு.க., வி.சி.க.வினர் பங்கேற்றனர்.
பாலியல் பலாத்கார நிகழ்வில் ஊடகங்கள் கேள்விகேட்ட பிறகே போலீஸ் வழக்குப்பதிவு செய்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம் இருந்தும், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை போலிஸ் வெளியிட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த கனிமொழியும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் சிலமணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று (12.03.2019) பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான போது….. pic.twitter.com/oL99t597Cc
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 12, 2019