கன்னியாகுமரியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: பொதுமக்கள் கோரிக்கை

ஓக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்டட்திற்கு நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். புயால் ஏற்பட்ட சேதம் மற்றும் அங்குள்ள பொதுமக்களின் மனநிலை குறித்து கேட்டறிந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் குமரி மாவட்ட மக்கள் அமைச்சரிடம் சில கோரிக்கைகளை வைத்தனர். ஓக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் 254 படகுகளில் சென்ற 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது அமைச்சர் நிர்மலாவுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் உடனிருந்தார்

நேற்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply