கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட பேராயரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரளாவை கன்னியஸ்திரியை பாலியல் செய்த வழக்கில் கைது செய்யபப்ட்ட முன்னாள் பேராயருக்கு கேரள நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துவிட்டதால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இருந்த அப்போது பிராங்கோ பிஷப்பாக என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை, பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபப்ட்டார்.
இந்த நிலையில் தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பிராங்கோ கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவர் ஜாமின் மீதான மனுவில் தற்போது தீர்ப்பு சற்றுமுன் வழங்கப்பட்ட நிலையில் பேராயர் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.