‘கபாலி’க்கு விமானம், ‘2.0’க்கு ராக்கெட்டா?

‘கபாலி’க்கு விமானம், ‘2.0’க்கு ராக்கெட்டா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து வரும் ‘2.0’ படத்திற்கு அதைவிட பிரமாண்டமாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் பிரமாண்டமான போஸ்டர் ஒன்றை ஸ்கை டைவிங் வீரர்கள் கையில் பிடித்து கொண்டு பத்தாயிரம் அடி உயரத்தில் நேற்று பறந்தனர். மேலே 2.0 போஸ்டர், கீழே துபாயின் கண்கொள்ளா அழகு காட்சி என அசத்தும் புகைப்படத்தை லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் சற்றுமுன்னர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதற்கு கமெண்ட் அளித்துள்ள ஒரு ரசிகர், 2.0 பட ஸ்டில்லுடன் கூடிய ராக்கெட் ஒன்றை ஏவுங்கள்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஹாலிவுட்டில் 2.0 பலூனை பறக்கவிட்ட லைகா நிறுவனம் இந்த படத்தின் புரமோஷனுக்காக பணத்தை தண்ணீர் போல் இறைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு இன்று துபாயில் நடைபெறவுள்ளது

Leave a Reply