மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் மக்கள் நீதி மையம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் நீதி மையம் கட்சி ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக அரசியல் கலாச்சாரத்தை மாற்றி புதிய விடியலை ஏற்படுத்த தனது முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது
அதன் பொருட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட கமல்ஹாசன் அவர்கள் பரப்புரையை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆலந்தூரில் தொடங்குகிறார். தொடர்ந்து வேளச்சேரி சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூரில் அவர் உரை நிகழ்த்துகிறார்
பிரச்சாரம் முடிவில் இரவு எட்டு மணிக்கு மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லை என்ற இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தேர்தல் பரப்புரையை நாளை (3.3.2021) மாலை 4 மணிக்கு சென்னை ஆலந்தூரிலிருந்து துவங்குகிறார்.
தொடர்ந்து வேளச்சேரி, சைதாபேட்டை மற்றும் மயிலாப்பூரில் பரப்புரை நிகழ்த்துகிறார். #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் #சீரமைப்போம்_தமிழகத்தை pic.twitter.com/tSjWuphds8
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 2, 2021