கமல்ஹாசனின் தொடர் மெளனம் ஏன்?
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஒரு பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்துவிட்டது. இந்த நிலையில் எந்த பிரச்சனைக்கும் முதல் ஆளாக கருத்து கூறி வந்த கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக நீண்ட மெளனத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக ஹைட்ரோகார்பன், குருப் 4 முறைகேடு, எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு, பெரியார் குறித்த ரஜினி சர்ச்சை, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் விருப்ப ஓய்வு என தமிழக பிரச்னைகள் அனைத்திலும் கமல் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்…? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் மக்களுக்காக செயல்படுமா இல்லை மவுனமாக இருக்குமா…? என்ற நெட்டிசன்களின் கேள்விகளுக்கு கமல் எப்போது பதிலளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்