கமல்ஹாசனின் முன்ஜாமீனில் என்னென்ன நிபந்தனைகள்: நீதிபதியின் தீர்ப்பு
அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் நாதுராம் கோட் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்றும் அவர் ஓர் இந்து என்றும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து இந்துக்களை புண்படுத்தும வகையில் கமல் பேசிவிட்டதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது- இந்த புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளை புண்படுத்துதல், மத மோதலை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, தீர்ப்பை மே 20ஆம் தேதிகு ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 15 நாட்களுக்குள் முன் ஜாமீன் பெறவேண்டும், 10,000 ரூபாய் பிணை தொகை செலுத்தவேண்டும், இருநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவேண்டும் என நிபந்தனைகளுடன் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.