கமல்ஹாசனின் விமர்சனம் திரையுலகத்தினருக்கு மனவேதனை: நடிகர் ரித்தீஷ்

கமல்ஹாசனின் விமர்சனம் திரையுலகத்தினருக்கு மனவேதனை: நடிகர் ரித்தீஷ்

கமல்ஹாசன் தமிழக அரசை குறி வைத்து விமர்சனம் செய்வது திரையுலகினர் பலருக்கு மனவேதனையை தருவதாக நடிகர் ரித்தீஷ் கூறியுள்ளார்.

கஜா புயலை இரண்டு முறை நேரில் சென்று பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நிவாரண பணிகள் மந்தமாக நடைபெறுவதாக தமிழக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து கருத்து கூறிய நடிகர் ரித்தீஷ், ‘தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின்போது உயிரிழப்பு குறைந்துள்ளது. கடுமையான சேதத்திலிருந்து மக்களை மீட்க அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், நடிகர் கமல்ஹாசன், புயல் பாதித்த 15 நாட்களுக்குப்பின் மக்களை சந்தித்தார். மக்களுக்கு ஆறுதல் கூறாமல் அரசை பற்றி விமர்சனம் செய்கிறார். தசாவதாரம் படத்தைப் போன்று எதையும் செய்துவிடுவது சினிமாவில் மட்டுமே முடியும்.

மிகப்பெரிய இயற்கை பேரழிவிலிருந்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததால் மக்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். கமல்ஹாசனின் விமர்சனம் திரையுலகத்தினருக்கு மனவேதனையை அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply