கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்தது தவறு: தமிழிசை செளந்தரராஜன்
சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறினார். காவிரி பிரச்சனை சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தீர்ந்துவிட்ட நிலையில் கமல்ஹாசன், கர்நாடக முதல்வரை சந்தித்தது தவறு என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: கர்நாடகாவில் காவிரி பிரச்சனை முடிந்த பிறகு கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்து பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை அவர் உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவு படுத்துகிறார். இது தன்னால்தான் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார்.
தமிழக அரசியல்வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் செய்தது போல் பேசுகின்றனர்.