கமல்ஹாசன் பாதையை பின்பற்றும் கேரள அரசு
சமீபத்தில் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார் என்பது தெரிந்ததே. விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் கமல், கேரள முதல்வரிடம் ஆலோசனை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது கமல்ஹாசன் இருபது வருடங்களுக்கு முன்னர் செய்த புரட்சி ஒன்றை கேரள அரசு செய்துள்ளது. அதாவது கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர்களுக்கு பிறந்த சான்றிதழை கமல் பெறும்போது அதில் ஜாதி பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.
இந்த புரட்சியை தற்போது கேரள அரசு செய்துள்ளது. சமீபத்தில் வெளியிட்ட அரசாணையில் பிறப்பு சான்றிதழில் ஜாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை நாடே பாராட்டினாலும், இதை கமல்ஹாசன் இருபது வருடங்களுக்கு முன்னரே தனியொரு மனிதராக செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.