கமல்ஹாஸன் கனவை ஊடகங்கள்தான் பரபரப்பாக்கி வருகின்றன.தினகரன்

கமல்ஹாஸன் கனவை ஊடகங்கள்தான் பரபரப்பாக்கி வருகின்றன.தினகரன்


கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இருந்தும் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியபோது எழுந்த எதிர்ப்பு கமல்ஹாசனுக்கு இல்லை. குறிப்பாக பெரிய அரசியல்வாதிகள் யாரும் கமல்ஹாசனின் அரசியல் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் கனவை ஊடகங்கள் மட்டுமே பெரிதாக்கி வருவதாக தினகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தினகரன், ‘ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலில் குதிக்கும் உரிமை உண்டு. கட்சி தொடங்கும் எவரும், முதல்வர் கனவு காணுவதில் தவறு கிடையாதே… ஆனால் கமல்ஹாஸன் கனவை ஊடகங்கள்தான் பரபரப்பாக்கி வருகின்றன. முதல் அதற்கான தகுதி, கட்டமைப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வெறும் பரபரப்புக்காக எழுதக்கூடாது,” என்று கூறினார்.

இந்த கருத்து குறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர் கூறியபோது, ‘தினகரனை விட கமல்ஹாசன் கண்டிப்பாக அதிக ஓட்டு வாங்குவார்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply