கமல் இல்லத்தில் ரஜினி! 45 நிமிடங்கள் பேசியது என்ன?

கமல் இல்லத்தில் ரஜினி! 45 நிமிடங்கள் பேசியது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அவர் தனது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று தனது நீண்டகால நண்பரான கமல் இல்லத்திற்கு சென்று அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்தார். இந்த சந்திப்பு சுமார் 456 நிமிடங்கள் நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது திருமணம் மட்டுமின்றி பலவேறு விஷயங்களை இருவரும் மனம்விட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் டாக்டர்.மகேந்திரன் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்டகுழு உறுப்பினரும் நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசர் ஆகியோர்களும் உடனிருந்தனர்.

 

Leave a Reply