கமல் கட்சியின் கடலூர்- நாகை பொறுப்பாளர் திடீர் விலகல்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் செயற்குழு உறுப்பினரும், கடலூர்- நாகை பொறுப்பாளராகவும் இருந்த குமாரவேல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்த்தில் மக்கள் நீதி கட்சியில் இணைந்த நடிகை கோவை சரளாவுக்கும் குமாரவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக குமாரவேல் கட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
வரும் 20ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கவிருக்கும் நிலையில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது