கமல் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை: சாருஹாசன்
மக்கள் விரும்பினால் அவர்களுக்கு சேவை செய்ய முதலமைச்சராக பதவியேற்கவும் தயார் என்று சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறிய நிலையில் கமல்ஹாசன் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை என்று அவருடைய சகோதரர் சாருஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
கமல், ரஜினி இருவரில் யார் அரசியலில் சாதிப்பார்கள் என்ற கேள்விக்கு கமல் சாதிக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய சாருஹாசன், முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கமலுக்கு இல்லை என்றும் கூறினார்.
அதே சமயம் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஆனால் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்றும் சாருஹாசன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.