கமல்-விஜயகாந்த் கூட்டணிக்கு ரஜினிக்கு ஆதரவு? அதிர்ச்சியில் கழகங்கள்
திமுக, அதிமுக என இரண்டு சந்தர்ப்பவதாக கழக கூட்டணிகளுக்கு மாற்று அமையாதா? என தமிழக மக்கள் ஆவலுடன் பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த முறையும் திமுக, அதிமுக கூட்டணியில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வதை தவிர மாற்று இல்லை என்ற சூழ்நிலைதான் உள்ளது
இந்த நிலையில் இரு கூட்டணியிலும் தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் விஜயகாந்த், கமல் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், சமீபத்தில் அவரை ரஜினிகாந்த் சந்தித்தபோது அவர்தான் இப்படி ஒரு திட்டத்தை கூறியதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்