கமல்-ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் மட்டுமே பிரதானமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், ரஜினி-கமல் கூட்டணி ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதிமுக, திமுக என இரண்டு வலுவான கூட்டணிகளை எதிர்க்கும் அளவுக்கு இந்த கூட்டணிக்கு பலம் இருக்கின்றதா என்பதை தேர்தல் முடிவு தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியை அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும், திமுக இந்த விஷயத்தில் அடக்கி வாசிக்கிறது என்பதே என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அறுவை சிகிச்சை ஒன்றுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கமலஹாசனை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்
இந்த சந்திப்பு நலம் விசாரிப்பது மட்டுமில்லாமல் அரசியல் பின்னணியும் இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் அதிசயம் நிகழும் என்பதால் இந்த சந்திப்புக்குப் பின்னர் ஏதாவது அதிசயம் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்