கருணாநிதிக்கு பாரத ரத்னா: திருச்சி சிவா வலியுறுத்தல்

கருணாநிதிக்கு பாரத ரத்னா: திருச்சி சிவா வலியுறுத்தல்

மறைந்த முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணநிதி, வயது மூப்பின் காரணமாக கடந்த செவ்வாயன்று சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று திருச்சி சிவா ராஜ்யசபாவில் வலியுறுத்தி பேசியுள்ளார். இது குறித்து இன்று ராஜ்யசபாவில் நடந்த கூட்டத்தொடரில் பேசிய திருச்சி சிவா, கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டார். பின்னர், இப்பெரும் மகானுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருடைய கோரிக்கைக்கு காங்கிரஸ் எம்பி.,க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply