கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: கமல்ஹாசன் கோரிக்கை
திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா ஏற்கனவே பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசியுள்ள நிலையில் தற்போது அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னை மெரீனாவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருடைய நினைவிடத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் அரசியல் மற்றும் இலக்கிய சேவையை போற்றும் வகையில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பேட்டி ஒன்றில் இந்த கருத்தை கமல்ஹாசனும் ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.