கருணாநிதியின் நினைவு நாளில் இதயபூர்வமான அஞ்சலி செலுத்திய அதிமுக பிரமுகர்
முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில் இன்று முதலாம் நினைவு தினம் திமுகவினர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் மறைந்த தலைவருக்கு பலர் புகழஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அதிமுக பிரமுகர் மைத்ரேயன் கூறியதாவது; கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி. எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் வெற்றிடம் என மைத்ரேயன் கூறியிருப்பது திமுக, அதிமுக இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.