கருணாநிதியைப் பார்த்தேன்: ராகுல்காந்தி பேட்டியால் உற்சாகத்தில் திமுகவினர்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தரவுள்ளார் என்று காலையில் செய்தி வெளிவந்த நிலையில் சற்றுமுன் அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
காவேரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த ராகுல் காந்தி அதன்பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருணாநிதி தமிழ் மக்களின் உத்வேகமாக இருந்து வருகிறவர். கருணாநிதி நலம் பெற்று வர எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. காங்கிரசுடன் நீண்டகாலமாக நட்புறவு கொண்டுள்ளவர் கருணாநிதியை பார்த்தேன், அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த பேட்டி திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.