கருணாநிதி இல்லத்தில் மோடி: உற்சாக வரவேற்பு கொடுத்த ஸ்டாலின்
பாரத பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், துரைமுருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
தினந்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி, திடீரென கருணாநிதியை சந்திக்க முடிவு செய்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின்னர் பலமுறை தமிழகத்திற்கு வருகை தந்திருந்தும் கருணாநிதியை சந்திக்காத நிலையில் இன்றைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.