கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரி மருத்துவமனை அறிக்கை.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவருடைய உடல்நிலை சீராகி வருவதாகவும் காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கருணாநிதி உடல்நிலை பின்னடைவு என்ற செய்தி அறிந்ததும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கொட்டும் மழையிலும் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.
கருணாநிதி உடல்நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியபோது, ‘கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சிகிச்சைக்குப் பின் சீராகியுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று கூறியுள்ளார்.