கருணாநிதி கொள்ளுப்பேரன் – விக்ரம் மகள் திருமணம்

கருணாநிதி கொள்ளுப்பேரன் – விக்ரம் மகள் திருமணம்

 

திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுக்கும் விக்ரம் மகளுக்கும் இன்று சென்னையில் சிறப்பாக திருமணம் நடந்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே.ரங்கநாதன் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது

இதன்படி இன்று திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த திருமணம் சிறப்பாக நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி மணமக்கள் மனோரஞ்சித்-அக்ஷிதா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த திருமணத்தில் திமுக பிரபலங்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

Leave a Reply