கருணாநிதி மரணத்தை வைத்து கீழ்த்தரமான அரசியல்: செல்லூர் ராஜூ
திமுக தலைவர் கருணாநிதி மறைவின்போது அவரை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கொடுக்க மறுத்த விவகாரம் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் கூடிய திமுக செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் கொடுக்க மறுத்த தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
நேற்று இதுகுறித்து பேசிய துணை முதலவ்ர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதி நினைவிட விவகாரம் முடிந்துபோன ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் சற்றுமுன் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘கருணாநிதி மரணத்தை வைத்து கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார்’ ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.