கருணாநிதி மறைவால் நிறுத்தப்பட்ட டி.என்.பி.எல் போட்டி எப்போது?
திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எல் இரண்டு போட்டிகள் நடக்கும் விபரங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட முதலாவது ஆட்டம் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும். இந்த ஆட்டம் முதலாவது தகுதி சுற்று போட்டியில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-2-வது இடம் பெற்ற டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் வருகிற 12-ந் தேதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
அதேபோல் இன்று இரவு 7.15 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பிடித்த அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற எஸ்.அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.