கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆயிற்று?

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆயிற்று?

தமிழகத்தில் அனேகமாக திமுக தலைவர் கருணாநிதி மீதுதான் அதிகளவில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கும். அவர் எந்த கருத்து கூறினாலும் அவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் மீது 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் காலமானார். இதனையடுத்து 2011ம் ஆண்டில் அவர் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட 13 அவதூறு வழக்குகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடித்து வைத்தது.

அதேபோல் கருணாநிதி மறைந்ததை அடுத்து, நேற்றுடன் அவருக்கு வழங்கப்பட்டிருந்த “இசட்” பிளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.

Leave a Reply