கருணாநிதி முன் கதறி அழுத பெண் வேட்பாளர். அறிவாலயத்தில் பரபரப்பு

கருணாநிதி முன் கதறி அழுத பெண் வேட்பாளர். அறிவாலயத்தில் பரபரப்பு

dmkசென்னை அறிவாலயத்தில் திமுக தோல்வி குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட  கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் மீனா லோகு கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி தலைமையை அதிர வைத்துள்ளார்.

மீனா லோகு இந்த கூட்டத்தில் பேசியபோது, ‘ வேட்பாளராக கட்சி என்னை அறிவித்ததும் மாவட்ட செயலாளர் வீரகோபாலைப் போய்ப் பார்த்தேன். அவர் எடுத்த எடுப்பிலேயே, ‘மாவட்ட செயலாளர் தேர்தல்ல எனக்கு எதிராக நீங்க நின்னீங்க. ஒன்றரை கோடி கொடுத்துத்தான் ஜெயிக்க முடிஞ்சது’ன்னு அதிருப்தியாக பேசினார்.

தேர்தலில் எனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவும் அவர் விரும்பவில்லை. நான் தன்னந்தனியாகத்தான் பிரசாரம் செய்தேன். நான்கு வார்டுகளில் கட்சி நிர்வாகிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. வேண்டுமென்றே என்னைப் புறக்கணித்தார்கள். போகும் இடங்களில் எல்லாம் குடிப்பதற்குப் பணம் கேட்டால் எங்கே போவது? ஏழாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்காமல் போவதற்கு இவர்கள்தான் காரணம். இதுவே, அ.தி.மு.க.வில் மலரவன், கே.பி.ராஜு, மேயர் ராஜ்குமார் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கும்பலாக ஓட்டுக் கேட்கப் போனார்கள். எனக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஒருவரும் இல்லை’ என்று பொரிந்து தள்ளினார்.

முன்னதாக கருணாநிதியை அவருடைய இல்லத்தில் சந்திக்க சென்ற மீனா லோகு, அவரை நேரில் பார்த்ததும் கதறி அழுததாகவும், அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் கருணாநிதியின் கண்களிலும் கண்ணீர் வந்ததாகவும் திமுக தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply