கருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி
காவல்துறை அதிகாரி குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், ஜாதி மோதல்களை தூண்டிவிடுவது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸை கண்டிக்காதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. மேலும் என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி.
ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.