கரு.பழனியப்பன் – அருள்நிதி இணையும் படத்தின் டைட்டில்
இயக்குனர் கரு.பழனியப்பன் கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்களில் ஆவேசமாக பேசி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் அரசியல் குறித்த கதை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை தற்கால அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.