கரையை கடந்து வலுவிழந்தது யாஸ் புயல்! 1320 கிராமங்கள் சேதம்

தீவிர புயலாக இருந்த யாஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று ஒடிஸா அருகே கரையை கடந்தது. யாஸ் புயல் நேற்று அதி தீவிர புயலாகவே கரையை கடந்தது. கரையை கடந்தவுடன் நேற்று மாலை தீவிர புயலாக வலுவிழந்தது. தீவிர புயலாக வலுவிழந்த யாஸ் தற்போது காற்றழுத்தமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் யாஸ் புயல் காற்றழுத்தமாக வலுவிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயலால் மேற்கு வங்கத்தில் 1,100 கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. அதேபோல் ஒடிஸாவில் 120 கிராமங்கள் மழை நீர் மற்றும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டன. 120 கிராம மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.