கர்நாடகாவில் எத்தனை புதிய அமைச்சர்கள்?
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் பதவியேற்றா நிலையில் தற்போது அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய இரு கட்சிகளுக்கும் எந்தெந்த துறை என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 அமைச்சர்களும், மஜதவுக்கு 12 அமைச்சர்களும், என பிரித்துக்கொள்ளப்பட்டது. அதேபோல் எந்தெந்த இலாகா யார் யாருக்கு என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.