கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு. ராம்ஜெத்மலானி விவாதம்.

jayalalitha bailபெங்களூர் ஐகோர்ட்டில் இன்று நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விவாதம் இன்று நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான ராம்ஜெத் மலானி, “ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஜாமீன் வழங்கினால் அவர் எங்கும் ஓடி விட மாட்டார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

ஆனால் அரசு தரப்பு சார்பாக வாதாடிய பவானிசிங் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பவானிசிங் தனது வாதத்தில் ‘ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட் நீதிபதி மதியம் 2.30 மணிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருப்பதால் கர்நாடக மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவரை தமிழக சிறைக்கு மாற்றவேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணை தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்து கர்நாடக ஐகோர்ட் பதிவாளரிடம் சட்ட பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply