கர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு
கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடாமல் இழுத்தடிப்பதாக பாஜக குற்றச்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கே கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை
இதனையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் கோஷம் போட்டதால் சட்டசபை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி கர்நாடக ஆளுநருடன் பாஜகவினர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மேலும் மற்ற விஷயங்களை அவையில் இன்று விவாதிக்கக் கூடாது எனவும் ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தியது. இதற்கிடையே அரசு தலைமை வழக்கறிஞரை சபாநாயகர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது