கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சமீபத்தில் 19 வயது வாலிபர் ஒருவர் ரத்ததானம் செய்தார். இந்த ரத்தத்தில் எச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்ததை கவனிக்காமல் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்த தானம் செய்த வாலிபர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரத்ததானம் செய்த அந்த வாலிபர் நேற்று வீட்டில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபரின் ரத்தத்தை ஏற்றியதால் கர்ப்பிணி எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

 

Leave a Reply