கர்மா முக்கியமானது, அதை அனுபவியுங்கள்: புல்வாமாக தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பேராசிரியை கைது!
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள கல்லூரி பேராசிரியை பாப்ரி பேனர்ஜி என்பவர் இந்தியப்பாதுகாப்பு படைகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில் அவரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாப்ரி பேனர்ஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 45 இளம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது போர் அல்ல.. அவர்களுக்கு திரும்ப சண்டையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது கோழைத்தனத்தின் உச்சக்கட்டம்.. இது இந்தியர்களின் இதயத்தை உடைக்கக்கூடிய செய்தி..
ஆனால் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? நீங்கள் அவர்களின் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறீர்கள்.. நீங்கள் அவர்களின் குழந்தைகளை கொலை செய்கிறீர்கள்.. நீங்கள் அங்குள்ள ஆண்களை படுகொலை செய்கிறீர்கள்.. உங்கள் ஊடகங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன.. ஆனால் நீங்கள் பதிலடி இல்லை என்று நினைகிறீர்களா..? உங்களுக்கு என்ன தெரியுமா.. பயங்கரவாதம் வேண்டுமானால் இஸ்லாமை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் கர்மா மிக முக்கியமானது.. அதை அனுபவியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பாப்ரி பேனர்ஜியின் இந்த கருத்தை அடுத்து அவர் பணி செய்து கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது